துர்க்கா செல்லியம்மன் கோவிலில் 1,001 திருவிளக்கு பூஜை


துர்க்கா செல்லியம்மன் கோவிலில்  1,001 திருவிளக்கு பூஜை
x

துர்க்கா செல்லியம்மன் கோவிலில் 1,001 திருவிளக்கு பூஜை நடந்தது.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் துர்க்கா செல்லியம்மன் கோவிலில் 43-வது ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி துர்க்கா செல்லியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஆராதனைகள் நடந்தன. இதில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை நகரசபை தலைவர் தாஹிரா அப்துல் கரீம் தொடங்கி வைத்தார். இதில் துணைத் தலைவர் ராம குணசேகரன், ஆசிரியர் சோமசுந்தரம், விழாக்குழு தலைவர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story