ஆடுதுறை மதுரகாளியம்மன் கோவிலில் 1,008 பால்குட விழா


ஆடுதுறை மதுரகாளியம்மன் கோவிலில் 1,008 பால்குட விழா
x

ஆடுதுறை மதுரகாளியம்மன் கோவிலில் 1,008 பால்குட விழா நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே ஆடுதுறையில் பிரசித்திப்பெற்ற மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு 94-ம் ஆண்டு 1,008 பால்குட விழா நடந்தது. இதைமுன்னிட்டு ஆடுதுறை காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. அப்போது பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பால்குட ஊர்வலத்தை தொடர்ந்து அலகு காவடிகள் எடுத்து இளைஞர்கள் பலரும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பால்குட விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story