கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மயிலாடுதுறை

திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரியில் உத்வாகநாதசாமி எனும் கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. நாயன்மார்களால் பாடல்பெற்ற இந்த தலத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்டதாக தல புராணம் கூறுகிறது.

திருமணத்தடை உள்ளவர்கள், நீண்ட நாட்களாக வரன் அமையாதவர்கள், இங்கு தினமும் நடைபெறும் திருமண பிரார்த்தனையில் பங்கேற்று அங்கு அளிக்கப்படும் மாலையை வீட்டிற்கு எடுத்து வந்தால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

மாசிமக திருவிழா

பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் மாசிமக திருருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கல்யாண சுந்தரேஸ்வரர்- கோகிலாம்பாள் கோவில் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் மற்றும் பால் சந்தனம் உள்ளிட்ட தீர்த்தங்களால் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து மகா தீபாராதனைக்கு பிறகு கொடி மரத்தில் ரிஷப கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதைத்தொடர்ந்து தீர்த்தவாரி 6-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.


Next Story