பர்கூரில்அரசமரத்து மாரியம்மன் கோவில் விழா
பர்கூர்
பர்கூர் கணேஷ் நகரில் அரசமரத்து மகா மாரியம்மன் கோவில் விழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கணபதி பூஜை, காப்பு கட்டுதல், பால்குடம் எடுத்தல், சுமங்கலி பெண்களுக்கு விரத காப்பு கட்டுதல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் அரசமரத்து அடியில் உள்ள மாரியம்மன், முத்தாரம்மன், பிரத்தியங்கிராதேவி, வராகி அம்மன், நாகராஜா, நாககன்னி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று பாரத கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக அரசமரத்து மாரியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்து அம்மனுக்கு ஊற்றி பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது அம்மன் மற்றும் இஷ்ட தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.