காவேரிப்பட்டணம் அருகேமுனியப்பன் கோவில் திருவிழா


காவேரிப்பட்டணம் அருகேமுனியப்பன் கோவில் திருவிழா
x
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் ஒன்றியம் போத்தாபுரம் கல்லேரி முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது. கிராம மக்கள் மேளதாளத்துடன் ஆடு, கோழி ஆகியவற்றுடன் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பொங்கல் வைத்து பூஜை செய்து ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு வழிபட்டனர். மேலும் பூசாரி கையால் பக்தர்கள் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story