திருவாலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருவிழா
திருவாலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொதிருவாலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுடங்கியது
மயிலாடுதுறை
திருவெண்காடு;
திருவெண்காடு அருகே திருவாலி கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச நரசிம்மர் கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த கோவிலில் நேற்று திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் மேளதாளம் முழங்க பக்தர்களால் லட்சுமி நரசிம்மர், கோவிலில் அமைந்துள்ள கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டார். இதைத்தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார், கோவில் அர்ச்சகர் சீதாராமன் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story