தேன்கனிக்கோட்டை அருகே மாரியம்மன் கோவில் திருவிழா


தேன்கனிக்கோட்டை அருகே  மாரியம்மன் கோவில் திருவிழா
x

தேன்கனிக்கோட்டை அருகே மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள அரசஜீர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கிராமமக்கள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்து கூழ் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து மாவிளக்கு மற்றும் முளைப்பாரி எடுத்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது விவசாயம் செழிக்கவும், வன விலங்குகளிடமிருந்து விளை பயிர்களை காக்க வேண்டும் என கிராம மக்கள் வேண்டி வழிபட்டனர்.


Next Story