மங்களம்கொம்பு அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்


மங்களம்கொம்பு அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்
x

கொடைக்கானல் அருகே மங்களம்கொம்பு அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல்

கொடைக்கானல் கீழ்மலை கிராமமான மங்களம்கொம்புவில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக 3 கால யாகசாலை பூஜைகள் மற்றும் விநாயகர் பூஜை, கிராம ஜனம் அழைப்பு, புண்ணியாக வாஜனம், மகா கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு 4-ம் மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுமங்கலி பூஜையுடன் கும்பம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 10.20 மணி அளவில் ராமசுப்பிரமணிய அய்யர் திருவேங்கடம் மற்றும் சிவாச்சாரியார்கள் பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.

இதில் மங்களம்கொம்பு, மங்களபுரம், எம்.ஜி.ஆர்.நகர், பட்டலங்காடு, தாண்டிக்குடி, கானல்காடு, பெரும்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அகில பாரத அய்யப்ப சேவா சங்க குருசாமி கிருஷ்ணன், தலைவர் சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர் முருகேசன், பொருளாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர்கள் விஜயன், மீனாட்சிசுந்தரம், பால்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பொதுமக்களும் செய்திருந்தனர்.


Next Story