துளுக்காணி மாரியம்மன் கோவில் விழா


துளுக்காணி மாரியம்மன் கோவில் விழா
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டது. விழாவையொட்டி பெண்கள் கூழ் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு ஊற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கூழ் மற்றுதம் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவையொட்டி இன்று (புதன்கிழமை) அம்மன் ஊர்வலம், மா விளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.


Next Story