சாதனஅள்ளி மாரியம்மன், சல்லாபுரியம்மன் கோவில் திருவிழா


சாதனஅள்ளி மாரியம்மன், சல்லாபுரியம்மன் கோவில் திருவிழா
x

ராயக்கோட்டையில் சாதனஅள்ளி மாரியம்மன், சல்லாபுரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் சாதனஅள்ளி, சல்லாபுரியம்மன் கோவில் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று காலை தீமிதி விழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் ெசலுத்தினர். விழாவில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மன்கள் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா நடைபெற்றது.


Next Story