சம்பன்னி பீரேஸ்வரர் கோவில் திருவிழா
ஓசூர் அருகே சம்பன்னி பீரேஸ்வரர் கோவில் திருவிழாவில் தலை மீது தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
ஓசூர் அருகே உள்ள இடையநல்லூர் கிராமத்தில் சம்பன்னி பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில், சம்பன்னி பீரேஸ்வரர், ஈரம்மா, ராமாதேவரு, வீரபத்திர சாமி, சிக்கம்மா, தொட்டம்மா உள்ளிட்ட கிராம தெய்வங்கள் மேள, தாளம் முழங்க தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் ஏராளமான குருபர் சமுதாய மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story