முத்துமுனியப்பன் கோவில் திருவிழா


முத்துமுனியப்பன் கோவில் திருவிழா
x

பனஞ்சாரியில் முத்துமுனியப்பன் கோவில் திருவிழா நடந்தது.

சேலம்

இளம்பிள்ளை

சின்னப்பம்பட்டி அருகே உள்ள பனஞ்சாரி முத்துமுனியப்பன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கசப்பேரி பாலம் அருகே இருந்து அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் பூங்கரகங்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து முத்து முனியப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடுகள், கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றி முத்து முனியப்பனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story