வரதராஜ பெருமாள் கோவிலில் வருஷாபிஷேகம்
வரதராஜ பெருமாள் கோவிலில் வருஷாபிஷேகம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா சர்க்கார் பெரியபாளையம் வரதராஜ பெருமாள் கோவிலில் வருஷாபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழாவுடன் இன்று நடக்கிறது.
பழமை வாய்ந்த கோவில்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா சர்க்கார் பொியபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஏறக்குறைய 50 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த இக்கோவிலில் கடந்த 2000-ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடைபெற்று 2009-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டது.
அதைத்தொடா்ந்து கடந்த 8-2-2009 அன்று கும்பாபிேஷகம் நடைபெற்றது. இதையடுத்து வருடந்தோறும் தைப்பூசத்திருநாளன்று வருஷாபிஷேகமும், பெருமாள் திருக்கல்யாணமும் நடைபெறும். இந்த வருடம் தைப்பூசம் திருநாளான இன்று(ஞாயிற்றுக்கிழமை) பவுர்ணமி திதியும், பூசம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய சுபதினத்தில் 14-ம் ஆண்டு வருஷாபிஷேகமும், 13-ம் ஆண்டு திருக்கல்யாண வைபோகமும் நடக்கிறது.
திருக்கல்யாணம்
வருஷாபிஷேக விழா இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை சாதித்தல், விஷ்வக்சேன ஆராதனை, வாசுதேவ புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கோ பூஜை, மகா சுதா்ஷன ஷோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனையுடன் தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது காலை 9 மணிக்கு திருக்கல்யாண உற்சவ விழா தொடங்குகிறது. அடுத்ததாக கல்யாண சீர்வரிசை தட்டுகள் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு திருமாங்கல்யதாரணம் ஆராதனை நடக்கிறது. மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. மதியம் 2 மணிக்கு உற்சவர் திருவீதி புறப்பாடு, அதைத்ெதாடர்ந்து ஊஞ்சல் சேவை, சாற்றுமறை மற்றும் மகா தீபாராதனையும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியார்கள், வரதராஜ பெருமாள் கோவில் அன்னதான குழுவினர் மற்றும் சர்க்கார் பெரியபாளையம் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.