மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
மயிலாடுதுறை அருகே மறையூர் மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
குத்தாலம், ஜூன்.5-
மயிலாடுதுறை அருகே மறையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 27 -ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் கரகம், செல்லியம்மன் பூஜை மற்றும் கரகம் ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்வசவம் நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தாமரைகுளக்கரையில் இருந்து கரகம், பால் குடம், அலகுகாவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக் குண்டத்தில் தீ மிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு மகாமாரியம்மன் வீதி உலா நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.