சித்தி விநாயகர், பஞ்சநதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு
பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடியில் சித்தி விநாயகர், பஞ்சநதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது.
கரம்பயம்;
பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடியில் சித்தி விநாயகர், பஞ்சநதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது.
சித்தி விநாயகர் கோவில்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் முசுகுந்த நாட்டின் முதன்மை கிராமமான திட்டக்குடியில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் தர்ம சம்வர்த்தினி பஞ்சநதீஸ்வரர், கண்ணனூர் மாரியம்மன் ஆலயங்களின் குடமுழுக்கு நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. குடமுழுக்கையொட்டி நேற்று காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை யாகசாலை பூஜை நடந்தது.
குடமுழுக்கு
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 2-ம் கால யாக சாலை பூஜையும் மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது.நாளை (புதன்கிழமை) காலை 5 மணிக்கு மேல் கடம் பூஜை லட்சுமி பூஜை 4-ம் கால யாக சாலை பூஜை ஆகியவை முடிந்து காலை 9 மணிக்கு கண்ணனூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கும் 10 மணிக்கு மேல் பஞ்சநதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.குடமுழுக்கு ஏற்பாடுகளை திட்டக்குடி கிராம மக்கள் செய்துள்ளனா். குடமுழுக்கையொட்டி திட்டக்குடி கிராம மக்கள் ஒரு வாரம் விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து கோவிலில் காணிக்கை செலுத்தினர்.