நத்தம் அருகே செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்


நத்தம் அருகே செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
x

நத்தம் அருகே செல்வ முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திண்டுக்கல்

நத்தம் அருகே சேத்தூரில் செல்வ விநாயகர் மற்றும் செல்வமுத்து மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. இதையொட்டி கோவில்களில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்தநிலையில் இன்று மேளதாளம் முழங்க ஏற்கனவே யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த அழகர்மலை, கரந்தமலை, காசி, ராமேசுவரம், வைகை உள்ளிட்ட பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த குடங்கள், ஊர்வலமாக கோவில்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு கோவில்களின் ராஜகோபுரம், மூலவர் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து செல்வ விநாயகர், செல்வமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் முருகேஸ்வரி குமார், உலுப்பக்குடி பால்பண்ணை தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சேத்தூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.



Related Tags :
Next Story