திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா; 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்


திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா; 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்
x

திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே திருமலைக்கேணியில் பிரசித்திபெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9 மணி அளவில் கோவிலில் கொடியேற்றம் நடைபெறும். அப்போது சஷ்டி விரதம் மேற்கொள்ள இருக்கும் பக்தர்கள், கோவிலில் காப்பு கட்டி விரதத்தை தொடங்குவார்கள்.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெறுகிறது. அதன்படி, முருகப்பெருமான் சிவபூஜை காட்சி, சிவ உபதேசம் செய்தல், அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளுதல், வேல் வாங்கும் திருக்காட்சி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் (31-ந்தேதி) திருக்கல்யாண வைபவத்துடன் சஷ்டி விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.



Related Tags :
Next Story