வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு


வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

வேளுக்குடி வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

திருவாரூர்

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே உள்ள, வேளுக்குடியில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமை வழிபாடு நடைப்பெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், வீர ஆஞ்சநேயருக்கு வடமாலை, அருகம்புல் மாலை, எலுமிச்சை மாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மேலும் இதே கோவிலில் அருள்பாலிக்கும் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story