விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு


விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
x

தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற வேதாந்தநாயகி விஸ்வநாதர் கோவில் உள்ளது. மறுபிறவி போக்கும் தலமான இங்கு பிரதோஷ காலத்தில் சூரியவாசல் திறக்கப்படுவது வழக்கம். நேற்று இந்த ஆண்டின் முதல் பிரதோஷம் என்பதால் வழக்கத்துக்கு அதிகமாக ஏராளமான பக்தர்கள் நேற்று வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் சாமி, அம்பாள் பிரதோஷ நாயனார் ஆகியோருக்கு மஞ்சள், திரவியம், பால், பஞ்சாமிர்தம், இளநீர், தயிர், தேன் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சாமி - அம்பாளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் பிரகாஷ் குருக்கள் செய்திருந்தார்.


Next Story