கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்;
கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அகத்தீஸ்வரர் கோவில்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கோனூர்நாடு கோட்டை தெருவில் பிரசித்திப்பெற்ற பெரியநாயகி உடனாகிய அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், தெட்சிணாமூர்த்தி, முருகன், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர், சூரியன், நவக்கிரகங்களும் தனிசன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.இக்கோவில் 2023-ம் ஆண்டின் முதல் பிரதோஷம் நேற்று முன்தினம நடந்தது. பிரதோஷத்தையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதையொட்டி கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சாமி, அம்பாளுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அபிஷேகம்
மேலும், கோவில் வளாகத்தில் உள்ள நந்தியெம்பெருமானுக்கு பால், மஞ்சள், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனையடுத்து நந்தி யெம்பெருமானுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.