திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு


திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு
x

கோட்டூர் அருகே திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.

திருவாரூர்

கோட்டூர்;

கோட்டூர் அருகே பெருவாழ்ந்தான் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. தொடர்ந்து கோவில் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டி திருப்பணி வேலைகள் நிறைவுற்ற நிலையில், நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. இதையொட்டி 4 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று புனித தீர்த்தங்கள் கொண்ட கடங்களை எடுத்து வேத மந்திரங்கள் முழங்க கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் திரவுபதி அம்மன் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story