உமாபதீஸ்வரர் கோவில் திருக்கல்யாணம்
கூத்தாநல்லூர் அருகே பண்டுதக்குடி உமாபதீஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் நடந்தது.
திருவாரூர்
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே உள்ள, பண்டுதக்குடியில் உமாபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நேற்று திருக்கல்யாணம் உற்சவ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால்அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உமாபதீஸ்வரர், வாசலாம்பிகைக்கு பக்தர்கள் முன்னிலையில் தாலி கட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
Related Tags :
Next Story