சித்திரை மாத கரக புறப்பாடு


சித்திரை மாத கரக புறப்பாடு
x

கும்பகோணம் வட்டி பிள்ளையார் கோவிலில் சித்திரை மாத கரக புறப்பாடு நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் திருவிடைமருதூர் சாலையில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான வட்டி பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் சிறப்பு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிறப்பு வழிபாடு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை பிள்ளையாம்பேட்டை காவிரி ஆற்றங்கரையில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் கரகம் எடுத்து வந்து வட்டி பிள்ளையார் கோவிலை அடைந்தனர். பின்னர் மதியம் விநாயகருக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு கஞ்சி வர்த்தல் நிகழ்ச்சியும் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரமும் இரவு சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.


Next Story