காளியம்மன் திரு நடன விழா
கும்பகோணம் பெருமாண்டியில் காளியம்மன் திரு நடன விழா நடந்தது.
தஞ்சாவூர்
கும்பகோணம்;
கும்பகோணம் அருகே உள்ள பெருமாண்டி பகுதியில் பழமை வாய்ந்த பூண்டியாயி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் காளியம்மன் திரு நடன வீதிஉலா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த புதன்கிழமை பூண்டியாயி கோவிலில் உள்ள காளியம்மன் திரு நடனத்துடன் வீதி உலா தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் காளியம்மன் திருநடன நிகழ்ச்சியில் நேற்று பழைய பாலக்கரை பகுதியில் பூந்தேர் பறித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காளியம்மன் கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி ஆய்வாளர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story