குருவார வழிபாடு


குருவார வழிபாடு
x

ஆலங்குடி குருபரிகார கோவிலில் குருவார வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வரர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போல நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


Next Story