கைலாசநாதசுவாமி கோவில் தல வரலாறு


கைலாசநாதசுவாமி கோவில் தல வரலாறு
x

பிலாஞ்சேரி கைலாசநாதசுவாமி கோவில் தல வரலாற்றை சூரியனார் கோவில் ஆதீனம் வெளியிட்டார்.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே உள்ள பிலாஞ்சேரியில் காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு அஷ்ட பைரவர்கள் சூழ சரபசூலினி அம்மன் தனி சன்னதியிலும், சிம்மவராகி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிப்பது சிறப்பு. பல்வேறு சிறப்புகள் பற்றி இந்த கோவில் தல வரலாறு நூலை சிம்வராகி அம்மன் சன்னதியில் சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டார். முதல் பிரதியை கைலாசநாத சுவாமி கோவில் பரம்பரை அறங்காவலர் சரபசூலினி உபாசகர் எஸ். நாகராஜசிவாச்சாரியார் பெற்றுக் கொண்டார். இதில் மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை வக்கீல் சேயோன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆலயத்திற்கு வந்த சூரியனார் கோவில் ஆதீனத்திற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு சுவாமி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்


Next Story