கோவில் கும்பாபிஷேக விழா


கோவில் கும்பாபிஷேக விழா
x

கடையநல்லூர் செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, தீபலட்சுமி பூஜை, பஞ்சகவ்யபூஜை, அனுக்ஞை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

நேற்று திருமுறை பாராயணம், 4-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் செண்பக விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் செண்பக விநாயகர் வீதிஉலா வருதல் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கடையநல்லூர் வெள்ளாஞ்செட்டியார் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.


Next Story