தெற்கு கோனார்கோட்டையில் கோவில் கும்பாபிஷேக விழா
தெற்கு கோனார்கோட்டையில் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கயத்தாறு:
கயத்தாறு தாலுகாவை சேர்ந்த தெற்கு கோனார் கோட்டை புதூர் காலனியில் செல்வ விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோவிலில், கடந்த 10-ந் தேதி இரவு 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. மறுநாள் மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை உள்பட பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. அன்று மாலை பல்வேறு தீர்த்தங்களில் இருந்து புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் புவனகிரி வேத பாராயணம் ஆகிய யாகங்கள் நடத்தப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் மங்கள இசையுடன் நான்காம் கால யாகசாலை பூஜை ஆரம்பமானது. இதில் 21 வகையான அபிஷேகங்கள், ஒன்பது வகையான நவக்கிரக யாகசாலை பூஜை மீண்டும் நடைபெற்றது. இதில் செல்வ விநாயகர், மாரியம்மன், காளியம்மன் மற்றும் பைரவர் சுவாமி உள்பட அனைத்து சாமிகளுக்கும் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு 10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.