கோவில் கும்பாபிஷேகம்
கோவில் கும்பாபிஷேகம் விழா நடந்தது
மதுரை
பேரையூரில் உள்ள மறவர் பொது உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட செல்வவிநாயகர், மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து சுப்பிரமணியசாமி கோவிலில் தீர்த்தம் எடுத்து வருதல், அதை அடுத்து யாக பூஜைகள் நடந்தது. செல்வ விநாயகர் மந்தையம்மன் கும்பாபிஷேகம் நடந்தது. அது சமயம் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மந்தையம்மன் அருள் பெற்று சென்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story