காவேரிப்பட்டணம் அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரம் ஊராட்சி நரிமேடு வஜ்ரம் கொட்டாயில் அங்காள பரமேஸ்வரி அம்மன், வில்லிஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி முகூர்த்த கால் நடுதல், கங்கனம் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. இதையடுத்து யாகசாலையில் இருந்து புனிதநீர் எடுத்து செல்லப்பட்டு கோபுரம் மற்றும் சாமிகளுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story