கோவில் மனைகளை சலுகை விலையில் கிைரயம் செய்து கொடுக்க வேண்டும்


கோவில் மனைகளை சலுகை விலையில் கிைரயம் செய்து கொடுக்க வேண்டும்
x

பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு கோவில் மனைகளை சலுகை விலையில் கிைரயம் செய்து கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர்

கோட்டூர்;

பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு கோவில் மனைகளை சலுகை விலையில் கிைரயம் செய்து கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோவில் மனைகள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சிங்க குளம் 6-ம் நம்பர் வாய்க்கால் மீனாட்சியம்மன் கோவில் தெரு, கம்மாளர் தெரு, ருக்குமணி குளம் தென்கரை தெரு, ஜி. ஆர். தோப்பு, மன்னை நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கோவில் மனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகிறார்கள். இவர்கள் சிறு தொழில் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். எனவே தமிழக அரசு அறநிலையத்துறை மூலம் இப்பகுதி மக்களின் நிலைமையை ஆய்வு செய்து அவர்கள் வசித்து வரும் கோவில் மனையை குடியிருப்பவருக்கே சலுகை விலையில் கிைரயம் செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளியேற்ற கூடாது

இது குறித்து தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன் கூறியதாவது:-

மன்னார்குடியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கோவில் மனையில் சிறு குறு தொழில் செய்து பிழைப்பவர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் என ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் கோவில் மனையில் பல தலைமுறைகளாக வசித்து வருகிறார்கள். இவர்கள் நியாய வாடகை செலுத்தி வீடு கட்டி வாழ்ந்து வரும் குடியிருப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற அறிவிப்பு கொடுத்து வெளியேற்ற எடுக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.

வாடகை பாக்கி

வாடகை பாக்கி என்றால் அறிவிப்பு கொடுத்து பாக்கியை வசூலிக்க வேண்டும். குடியிருப்பவர் செலுத்தும் வாடகையை முறையாக வரவு வைத்து ரசீது வழங்கி பாக்கி தொகையை ரசீதில் குறிப்பிட வேண்டும். எனவே மனையில் வீடு கட்டவும் வீட்டை பழுதுநீக்கவும் தடை விதிக்க கூடாது. வாரிசுதாரர்களுக்கும் பகுதி மாற்றம் செய்தவர்களுக்கும் நிபந்தனை இன்றி பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும்.

சதுர அடி கணக்கில் நிர்ணயித்த வாடகையை ரத்து செய்து முந்தைய பகுதி அல்லது குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும். கோவில் மனைகளில் தலைமுறை தலைமுறையாக குடியிருந்து மனையை பாதுகாத்து வரும் குடியிருப்பவவர்களுக்கு சலுகை விலையில் மனையை கிைரயம் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story