கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு


கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு
x

உவரி அருகே கோவில் பூட்டை உடைத்து நகைகளை மர்மநபர் திருடிச் சென்றார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே தெற்கு புலிமான் குளத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள 6 பவுன் தங்க நகைகளையும், உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரத்தையும் திருடிச் சென்றுவிட்டதாக உவரி போலீசில் ஊர் தலைவர் லிங்கம் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அங்குள்ள இசக்கியம்மன் கோவிலிலும் திருட்டு முயற்சி நடந்துள்ளது.


Next Story