ரூ.20¼ லட்சம் உண்டியல் காணிக்கை


ரூ.20¼ லட்சம் உண்டியல் காணிக்கை
x

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் ரூ.20¼ லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது. மேலும் பக்தர்கள் உண்டியலில் 34 பவுன் தங்கம், 423 கிராம் வெள்ளியை செலுத்தி இருந்தனர்.

திருவாரூர்

வலங்கைமான்;

வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் ரூ.20¼ லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது. மேலும் பக்தர்கள் உண்டியலில் 34 பவுன் தங்கம், 423 கிராம் வெள்ளியை செலுத்தி இருந்தனர்.

மகா மாரியம்மன் கோவில்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மார்ச் மாதம் பாடைக் காவடி திருவிழா நடந்தது. அப்போது கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக நிரந்தர உண்டியல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நேற்று அந்த உண்டியல்களை திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது.

34 பவுன் தங்கம்

திருவாரூர் உதவி ஆணையர் ராணி தலைமையில் செயல் அலுவலர் ரமேஷ் தக்கார் தமிழ்மணி ஆகியோர் முன்னிலையில் அரசு பாலிடெக்னிக் மாணவர்கள், கும்பகோணம் அய்யப்பா சேவா சங்கத்தினர் மற்றும் தெரு மக்கள் கலந்துகொண்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளை பிரித்து எண்ணினர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.20 லட்சத்து 31ஆயிரத்து 869 மற்றும் 275 கிராம் தங்கம்(34 பவுன்), மற்றும் 423கிராம் வெள்ளி பொருட்களை செலுத்தி இருந்தனர்.


Next Story