மகா மாரியம்மன் கோவிலில் ரூ.7¾ லட்சம் உண்டியல் காணிக்கை
வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் ரூ.7¾ லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டு இருந்தது.
தஞ்சாவூர்
வலங்கைமான்;
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் பாடைக்காவடி திருவிழா நடந்தது. அப்போது கோவிலில் 7 தற்காலிக உண்டியல்கள் பக்தர்கள் காணிக்கை செலுத்த அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று அந்த உண்டியல்களை திறந்து காணிக்கை பணத்தை எண்ணும் பணி திருவாரூர் உதவி ஆணையர் மணவழகன், செயல் அலுவலர் ரமேஷ், தக்கார் தமிழ்மணி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அரசு பாலிடெக்னிக் மாணவர்கள், ஆசிரியர்கள், அய்யப்பா சேவா சங்கத்தினர் மற்றும் மக்கள் உண்டியல் பணத்தை எண்ணினர். இதில் ரூ. 7 லட்சத்து 74 ஆயிரத்து 178 மற்றும் 27 கிராம் தங்கம், 172 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
Related Tags :
Next Story