ரூ.46 லட்சம் உண்டியல் காணிக்கை


ரூ.46 லட்சம் உண்டியல் காணிக்கை
x

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரூ.46 லட்சம் மற்றும் 1 கிலோ தங்கத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்;

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ரூ.46 லட்சம் மற்றும் 1 கிலோ தங்கத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

அமிர்தகடேஸ்வரர் கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இங்கு மட்டுமே ஆயுள் ஹோமம், சதாபிஷேகம், மணி விழா உள்ளிட்ட விழாக்கள் நடக்கிறது. இதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்து செல்கிறார்கள்.

1 கிலோ தங்கம்

இந்தநிலையில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது.கோவில் கண்காணிப்பாளர் மணி, இந்து சமய அறநிலை துறை ஆய்வாளர் பத்ரி நாராயணன், மயிலாடுதுறை சரக ஆய்வாளர் ஆரோக்கிய மதன் ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்த பணியில் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதில் கோவில் உண்டியல்களில் ரூ.46 லட்சம், 1 கிலோ தங்கம், 1 கிலோ 10 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


Next Story