கோவில் கொடை விழா


கோவில் கொடை விழா
x

எட்டயபுரம் புது அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரம் கீழ ரத வீதியில் அமைந்துள்ள புது அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக கால்நாட்டு விழா நடந்தது. நேற்று முன்தினம் காலை பால்குட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து புது அம்மன் குடி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடந்தது. நேற்று முளைப்பாரி, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு 11 மணிக்கு பொங்கல் வைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அதிகாலையில் புது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து மாலையில் முளைப்பாரி அம்மன் தெப்பத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முளைப்பாரி ஊர்வலம் மேலரத வீதி வழியாக சென்று பெரிய தெப்பக்குளத்தில் முளைப்பாரி அம்மன் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.


Next Story