கோவில் கொடை விழா


கோவில் கொடை விழா
x

பரப்பாடி அருகே கோவில் கொடை விழா நடந்தது

திருநெல்வேலி

இட்டமொழி:

பரப்பாடி அருகே உள்ள தெற்கு பாப்பான்குளம் ஊருக்கு வடக்கிலுள்ள வாகைகுளம் கரையில் வீற்றிருந்து அருள் பாலித்து வரும் மாசானமுத்து சுவாமி கோவில் கொடை விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை, அன்னதானம், குடி அழைப்பு, கருக்கல் பூஜை, அலங்கார பூஜை, சாம கொடை, சுவாமி வேட்டைக்கு சென்று வருதல், சுவாமி அருள்வாக்கு, கனியான் கூத்து, மகுடாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story