முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா
முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழாவில் திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
திருநெல்வேலி
அம்பை:
அம்பை அருகே வாகைக்குளம் வாகைபதி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் அருகில் உள்ள முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 13-ந் தேதி பெண்கள் மன்னார்கோவில் விநாயகர் கோவிலில் இருந்து அரிசியின் மேல் தேங்காயில் விளக்கு ஏற்றி தீபமங்கள ஜோதி வழிபாடு ஊர்வலம் நடைபெற்றது. விரதமிருந்த பக்தர்கள் கொதிக்கும் உலை நீரில் தென்னங்குருத்தை நனைத்து தலையில் அடிக்கும் வழிபாடு நடந்தது. இரவில் வாகைபதி அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது, விரதம் இருந்த திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள். அதன்பின் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை வாகைகுளம் அய்யாவழி அன்புக்கொடி மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story