கோவில் குளம் புனரமைப்பு பணி
திருவாரூரில் ரூ.1 கோடியே 9 லட்சத்தில் பிடாரி கோவில் குளம் புனரமைப்பு பணி நடந்தது
திருவாரூர்,
திருவாரூரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் பிடாரி கோவில் குளம் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளத்தின் நான்கு கரைகளிலும் நடைபாதை, குழந்தைகள் விளையாடும் விளையாட்டு அமைப்புகள் மற்றும் மின்விளக்கு வசதிகளுடன் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து நகராட்சி 3-வது வார்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குட்டை குளத்தில் ஆகாய தாமரைகள் அகற்றி தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்ே்பாது உதவி கலெக்டர் சங்கீதா, நகரசபை தலைவர் புவனபிரியா, நகராட்சி ஆணையர் பிரபாகரன், நகரசபை உறுப்பினர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.