Normal
புதிய கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை
சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவில் புதிய கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது
மயிலாடுதுறை
கொள்ளிடம், மே.31-
கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் பஞ்சலோக கொடிமரம் புதியதாக அமைக்கப்பட்டு அதற்கான சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர் யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு கொடிமரத்துக்கு அபிஷேகமும் தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதையொட்டி சாந்த முத்துமாரிஅம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story