கோவில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை
உவரியில் கோவில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
திருநெல்வேலி
திசையன்விளை:
உவரி குருக்கள் தெருவை சேர்ந்தவர் நமச்சிவாயம் (வயது 55). கோவில் பூசாரி. இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். முதல் மகள் ராஜேஷ்வரி கணவரை பிரிந்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் காயத்திரி மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதம் இன்றி திருமணம் செய்துள்ளார். இவரது மனைவி மாரியம்மாள் திசையன்விளையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். மகள்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாததால் விரக்தியில் இருந்த நமச்சிவாயம் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி உவரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story