கோவில் பூசாரி விஷம் குடித்து தற்கொலை


கோவில் பூசாரி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கோவில் பூசாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த காளியப்பன் மகன் நடராஜன் (வயது 69). இவர் இலுப்பையூரணி விலக்கில் உள்ள ஐவராஜா கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வயிறுவலி அதிகரித்து காணப்பட்டதால், மனமுடைந்து விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story