ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் தேரோட்டம்


ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் தேரோட்டம்
x

28 ஆண்டுகளுக்கு பிறகு காமநாதீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

சேலம்

தலைவாசல்

28 ஆண்டுகளுக்கு பிறகு காமநாதீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேரோட்டம்

தலைவாசல் அருகே ஆறகளூர் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரர் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு பூர நட்சத்திரத்தில் தேர் பவனி தொடங்கியது. காலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தின் மீது சூரியஒளி படுவதை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் ஆகிய பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தேரோட்டம் நேற்று காலை மீண்டும் 10.30 மணிக்கு தொடங்கி ஊர் முக்கிய வீதி வழியாக வலம் வந்து மாலை 4 மணிக்கு நிலையை அடைந்தது. முன்னதாக காம நடேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. தேரின் மீது விவசாயிகள் தாங்கள் விளைவித்த கம்பு, சோளம், மக்காச்சோளம், தேங்காய், மாங்காய் உள்ளிட்ட உணவு பொருட்களை கட்டி தொங்க விட்டு இருந்தனர். தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

18 கிராம மக்கள்

தேரோட்ட விழாவில் பெரியேரி, சித்தேரி, நத்தக்கரை, தலைவாசல், தியாகனூர், ஆரத்தி அகரம், கோவிந்தம்பாளையம், காமக்காபாளையம், வேப்பம்பூண்டி உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவில் நல்லதம்பி எம்.எல்.ஏ., மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், தலைவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி, ஆறகளூர் ஊராட்சி தலைவர் விஜயன், ஒன்றிய குழு உறுப்பினர் ரவி, ஒன்றிய அட்மா குழு தலைவர் மணி, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை, தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன், தக்கார் குணசேகரன் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.


Next Story