கோவில் வருசாபிஷேகம்


கோவில் வருசாபிஷேகம்
x

சிவகிரி சேனை விநாயகர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள சேனை விநாயகர் கோவிலில் வருசாபிஷேக விழா நடைபெற்றது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலையில் குற்றாலம், திருச்செந்தூர், சிவகிரி கூடாரப்பாறை ஆகிய இடங்களில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

பின்னர் கோவில் விமானத்துக்கும், விநாயகருக்கும் புனித நீர் ஊற்றி வருசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story