கோவில் வருசாபிஷேகம்


கோவில் வருசாபிஷேகம்
x

தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவில் வருசாபிஷேகம் நடந்தது

தூத்துக்குடி

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி விக்னேசுவர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கும்பபூஜை, வேதபாராயணம், ருத்ர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து 10 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு மகா அபிசேகமும், 10.30 மணிக்கு விமான கோபுரம் மற்றும் மூலஸ்தானத்தில் வருசாபிஷேகமும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story