கோவில் பணியாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


கோவில் பணியாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x

தென்காசியில் கோவில் பணியாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

தென்காசி

இந்து சமய அறநிலையத்துறை, அமைச்சர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி தென்காசி மாவட்டம், தூத்துக்குடி இணை ஆணையர் மண்டலம், தென்காசி உதவி ஆணையர் பிரிவு எல்கைக்கு உட்பட்ட கோவில் பணியாளர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம் தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்கினார். உதவி ஆணையர் சங்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தென்காசி, சிவகிரி, ஆலங்குளம், குற்றாலம், இலஞ்சி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பணியாற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்தனர். இதுகுறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். முடிவில் தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் நிர்வாக அதிகாரி முருகன் நன்றி கூறினார்.


Next Story