காலாவதியான தின்பண்டங்களை சாலையோரம் கொட்டிய டெம்போ சிறைபிடிப்பு


காலாவதியான தின்பண்டங்களை சாலையோரம் கொட்டிய டெம்போ சிறைபிடிப்பு
x

திருவட்டார் அருகே காலாவதியான தின்பண்டங்களை சாலைேயாரம் கொட்டிய டெம்போவுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டார் அருகே காலாவதியான தின்பண்டங்களை சாலைேயாரம் கொட்டிய டெம்போவுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

காலாவதியான தின்பண்டம்

கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்ட விராலிக்காட்டு விளையில் பேக்கரியில் காலாவதியான சாக்லெட், பிஸ்கட், குளிர்பானம் உள்ளிட்ட தின்பண்டங்களை டெம்போவில் ஏற்றி வந்து அந்த பகுதியில் சாலையோரம் கொட்டி விட்டு சென்றன. இதை பார்த்த சிறுவர்கள் சிலர் தின்பண்டங்களை சாப்பிடுவதற்காக தங்களின் வீடுகளுக்கு பெட்டி, பெட்டியாக தூக்கி ெசன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி தலைவர் ரெஜினி விஜிலா பாய், முன்னாள் தலைவர் ராஜ், வார்டு உறுப்பினர்கள் ஜெயா, அனிதா, மற்றும் பொதுமக்கள் அங்கு வந்து சிறுவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது மீண்டும் காலாவதியான தின்பண்டங்களை ஏற்றிக்கொண்டு ஒரு டெம்போ வந்தது. உடனே அந்த டெம்போவை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

அபராதம்

இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள், கண்ணனூர் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் அங்கு வந்தனர்.

தொடர்ந்து காலாவதியான பொருட்களை ஏற்றி வந்த டெம்போக்களுக்கு தலா ரூ.1050 வீதம் மொத்தம் ரூ. 2100 விதிக்கப்பட்டது. அத்துடன் கொட்டப்பட்ட பொருட்களை பேக்கரி உரிமையாளர் மீண்டும் டெம்போவில் ஏற்றினார். பின்னர் இரண்டு வாகனத்தில் உள்ள பொருட்களும், ஊராட்சி பணியாளர்கள் முன்னிலையில் தரம் பிரித்து அழிப்பதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்தார். இதையடுத்து ஊராட்சி பணியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story