ராஜாக்கமங்கலம் அருகே லாரி மீது டெம்போ மோதல்; 7 பேர் படுகாயம்
ராஜாக்கமங்கலம் அருகே லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் அருகே லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
குமரி மாவட்டம் கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 57). சம்பவத்தன்று இவர் ஒரு டெம்போவில் அதே பகுதியை சேர்ந்த சகாய அமல ஜஸ்டின் (42), ஜான் பெபின் (50), பிரான்சிஸ் (56), ததேயுஸ் (49) மற்றும் ராமேசுவரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த கனகராஜ் (56) ஆகியோருடன் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து டெம்போவில் மீன் ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலையில் புறப்பட்டார். டெம்போவை மயிலாடி பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜேஷ் (20) என்பவர் ஓட்டினார்.
ராஜாக்கமங்கலம் அருகே அளத்தங்கரை பகுதியில் சென்ற போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது டெம்போ பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். மேலும் டெம்போ முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.