குலசேகரம் அருகே டெம்போ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
குலசேகரம் அருகே டெம்போ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரம்:
குலசேகரம் அருகே டெம்போ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரம் அருகே உள்ள அரமன்னம் புத்தன்விளை பகுதியைச் சேர்ந்தவர் சந்தியநாதன் (வயது 61), டெம்போ டிரைவர். இவருடைய முதல் மனைவி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின்பு பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார்.
இந்தநிலையில் சந்தியநாதன் தனது இளைய மகனான சுபில்குமாருடன் வசித்து வந்தார். மேலும் சந்தியநாதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேைலக்கு செல்லவில்லை. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் சுபில் குமார் குடும்பத்துடன் வெளியே சென்றார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சந்தியநாதன் விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். சிறிது நேரம் கடந்து வீட்டுக்கு திரும்பி வந்த குடும்பத்தினர் சத்தியநாதன் விஷம் குடித்து உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.