ஓடைக்குள் கவிழ்ந்த டெம்போ


ஓடைக்குள் கவிழ்ந்த டெம்போ
x

நித்திரவிளை அருகே ஓடைக்குள் கவிழ்ந்த டெம்போ

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

நித்திரவிளை அருகே வளையச்சுற்று பகுதியை சேர்ந்த பாபு என்பவர் கட்டுமான பொருட்களை டெம்போவில் ஏற்றிக் கொண்டு சென்றார். நம்பாளி பகுதியில் குறுகலான சாலை வழியாக செல்ல முயன்ற போது திடீரென டெம்போ நிலைதடுமாறி ஓடைக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பாபு உயிர் தப்பினார். உடனே அவரை பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் டெம்போ மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story